விளையாட்டு

“அனைத்திலும் கில்லி தான்” - தோனி படைத்த புதிய சாதனை !

“அனைத்திலும் கில்லி தான்” - தோனி படைத்த புதிய சாதனை !

webteam

இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் 5 கேட்ச்-கள் பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி பிரிஷ்டாலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெல்லும் அணிக்கு கோப்பை என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ராய் 67 (31), பட்லர் 34 (21), அலெக்ஸ் 30 (24), ஜானி 25 (14) ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களுக்கு 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கவுல் 2, உமேஷ் யதாவ் மற்றும் தீபக் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் இந்திய கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டன் தோனி 5 கேட்ச்-கள் பிடித்தார். இதன்மூலம் சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில், ஒரே போட்டியில் 5 கேட்ச்-கள் பிடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முதல் கேட்ச் : சாஹர் வீசிய பந்தில் ராய் 

2வது கேட்ச் : ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் அலெக்ஸ் 

3வது கேட்ச் : ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் மார்கன்

4வது கேட்ச் : ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஜானி

5வது கேட்ச் : கவுல் வீசிய பந்தில் ப்ளங்கட் 

இதுதவிர கிரிஷ் ஜார்டனை தோனி ரன் அவுட் செய்துள்ளார். தற்போது 199 என்ற இலக்கை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.