இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்க் செய்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது போட்டி, சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. போட்டி சற்று நேரத்திற்கு முன்னர் தான் தொடங்கியது என்பதால் நள்ளிரவு வரை நடைபெறும். இன்று இரவு 12 மணி வந்தால், அதாவது நாளை தோனியின் பிறந்த நாள். அத்துடன் இது அவரது 500வது சர்வதேச போட்டி. எனவே அவரது ரசிகர்கள் தோனி இந்தப் போட்டியில் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.