விளையாட்டு

குல்தீப் சுழலில் மிரண்டது இங்கிலாந்து : இந்தியாவுக்கு 269 இலக்கு !

குல்தீப் சுழலில் மிரண்டது இங்கிலாந்து : இந்தியாவுக்கு 269 இலக்கு !

webteam

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 269 ரன்கள் இலக்காக அமைந்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாசன் மற்றும் ஜானி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ‘சைனா மேன்’ குல்தீப் யாதவின் சுழலை எதிர்கொள்ள முடியாமல், 38 (35) ரன்களில் ஜாசனும் மற்றும் 38 (35) ரன்களில் ஜானியும் அவுட் ஆகினர். 

அடுத்த வந்த ரூட் 3 (6) ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், குல்தீப் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ-வில் அவுட் ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் விக்கெட்டை பறிகொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 50 (103) ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அதேபோன்று பட்லரும் குல்தீப் பந்தில் 53 (51) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 49.5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். உமேஷ் யாதவ் 2 மற்றும் சாஹல் 1 விக்கெட் எடுத்தனர். தற்போது இலக்கை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.