விளையாட்டு

314 ரன்கள் குவித்த இந்திய அணி - பங்களாதேஷை சுருட்டுமா ?

314 ரன்கள் குவித்த இந்திய அணி - பங்களாதேஷை சுருட்டுமா ?

webteam

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 314 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா சதம் அடித்தார். பின்னர் 104 (92) ரன்களில் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 77 (92) ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி 26 (27) ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட் 48 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையே வந்த ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் 0 (2) விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதி ஓவர் வரை பவுண்டரிகளை அடிக்க நினைத்த தோனி 35 (33) ரன்களில் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் முஸ்தஃபிஸுர் ரகுமான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து பந்துவீசும் இந்திய பங்களாதேஷை சுருட்டி அரையிறுதிக்குள் நுழையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.