கால்பந்து மைதானத்தில் பந்தைப் பிடிக்கச் சென்ற போது வீரர்கள் மீது மோதிய இந்தோனேஷிய கோல் கீப்பர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள லாமோன்கனை சேர்ந்தவர் ஜோய்ருல் ஹூடா (38). பிரபல கோல்கீப்பரான இவர், லாமோன்கனில் உள்ள பெர்சிலா கால்பந்து கிளப்பில் 1999-ம் ஆண்டு முதல் விளையாடி வந்தார். இந்த கிளப்புக்கும் இந்தோனேஷியாவில் உள்ள செமன் பெதாங் கால்பந்து கிளப்புக்கும் நேற்று நடந்த போட்டியில் கோல் கீப்பராக ஹூடா இருந்தார். அப்போது தன்னை நோக்கி வந்த பந்தை பிடிக்கும்போது, எதிர்பாராத விதமாக, சொந்த அணி வீரர் மீது மோதினார். மோதிய வேகத்தில் தலை மற்றும் கழுத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, மைதானத்தில் மயங்கி சாய்ந்தார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.