விளையாட்டு

“அறைக்குள் சென்று அழுதேன்” - அணியில் இடம் பிடிக்காதது குறித்து பிரித்வி ஷா உருக்கம்

“அறைக்குள் சென்று அழுதேன்” - அணியில் இடம் பிடிக்காதது குறித்து பிரித்வி ஷா உருக்கம்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரர் பிருத்வி ஷா மோசமான பார்ம் காரணமாக அடிலெய்ட் டெஸ்டுக்கு பிறகு அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிருத்வி ஷா. 

“அன்று நான் டென்ஷனாக இருந்தேன். எதற்குமே உபயோகமற்றவனாக உணர்ந்தேன். நான் என் அறைக்குச் சென்று மனம் உடைந்து அழுதேன். ஏதோ தப்பாக நடப்பது போல தெரிந்தது. அந்த தவறுக்கான பதிலை உடனடியாக நான் தேடியாக வேண்டும்” என ஆஸ்திரேலிய தொடரில் அணியில் இடம் பெற முடியாத வேதனையை பகிர்ந்துள்ளார் பிருத்வி ஷா. 

அடிலெய்ட் டெஸ்டில் ஷா முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டும், இரண்டாவது  இன்னிங்ஸில் 4 ரன்களையும் எடுத்திருந்தார். தற்போது விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் அசத்தலாக ஆடி வருகிறார் ஷா. இந்த தொடரில் 7 போட்டிகளில் 754 ரன்கள் விளாசியுள்ளார் பிருத்வி ஷா.