விளையாட்டு

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த இந்திய மல்யுத்தவீரர்: ஒலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகம்

EllusamyKarthik

ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்த காரணத்தினால் இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. டெல்லியை சேர்ந்த 28 வயதான சுமித், 125 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருந்த நிலையில் இது தெரியவந்துள்ளது. 

பல்கேரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். தொடர்ந்து அவருக்கு அவருக்கு UWW அமைப்பு நடத்திய ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் தோல்வி அடைந்துள்ளார். அதனால் அவர் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ள ஊக்கமருந்து B சோதனையில் அவர் தேறினால் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும். 

சுமித் இப்போதைக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்தகட்ட பரிசோதனையிலும் அவர் தோல்வி அடைந்தால் தடை பிறப்பிக்கலாம் என தெரிகிறது. 

2018 காமன்வெல்த் போட்டியில் சுமித் தங்கம் வென்றிருந்தார். ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வி அடைந்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.