இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனையை தகர்த்துள்ளார் ரிஷப் பண்ட். 26 டெஸ்ட் போட்டிகளில் (50 இன்னிங்ஸ்) இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்து, 100 டிஸ்மிஸலை எட்டியுள்ளார் பண்ட். இதன் மூலம் இந்திய அணி சார்பில் மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளில் கீப்பிங் பணியை கவனித்து, அதிவிரைவாக 100 டிஸ்மிஸலை நிறைவு செய்த வீரர்களின் பட்டியலில் தற்போது முதலிடம் பிடித்துள்ளார் பண்ட்.
இதற்கு முன்னதாக 36 டெஸ்ட் போட்டிகளில் 100 டிஸ்மிஸலை நிறைவு செய்ததே இந்திய விக்கெட் கீப்பரின் சாதனையாக இருந்தது. இதனை தோனி மற்றும் சாஹா தங்கள் வசம் வைத்திருந்தனர். தற்போது அதனை பண்ட் தகர்த்துள்ளார். மொத்தம் 92 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங் இந்த 100 டிஸ்மிஸல்களில் அடங்கும்.
100 டிஸ்மிஸல்களை நிறைவு செய்த இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர்கள்...
>ரிஷப் பண்ட் (26 போட்டிகள்)
>தோனி மாற்று சாஹா (36 போட்டிகள்)
>கிரண் மோர் (39 போட்டிகள்)
>மோங்கியா (41 போட்டிகள்)
>கிர்மாணி (42 போட்டிகள்)