விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: புதிய சாதனையை படைத்த இந்திய கேப்டன் மிதாலி ராஜ்

EllusamyKarthik

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு அணியை அதிகமுறை வழிநடத்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியையும் சேர்த்து மொத்தம் 24 போட்டிகளில் இந்தியாவை உலகக் கோப்பையில் வழிநடத்தியுள்ளார் மிதாலி. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்கின் சாதனையை முறியடித்துள்ளார். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் அணியை அதிகமுறை வழிநடத்தியவர் என்ற சாதனையும் மிதாலி வசம் உள்ளது. 

மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள வீராங்கனைகளில் மிதாலி முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 7668 ரன்கள் எடுத்துள்ளார் அவர்.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்துள்ளார்.