விளையாட்டு

பிரிஸ்பேன் டெஸ்டில் நடராஜன்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பிரிஸ்பேன் டெஸ்டில் நடராஜன்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி சமானில் முடிந்தது. நான்காவது போட்டி வரும் 15 ஆம் தேதி அன்று ஆரம்பமாக உள்ளது. 

காயம் காரணமாக ஜடேஜா, பும்ரா மற்றும் விஹாரி விலகியுள்ளனர். அவர்களில் பும்ராவுக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர் அல்லது நடராஜன் விளையாடலாம் என்றும், ஜடேஜாவுக்கு மாற்றாக குல்தீப் யாதவ் விளையாடவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களும் நடராஜன் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பதாக ட்வீட் செய்து வருகின்றனர். பும்ராவுக்கு மாற்று நடராஜன்தான் என ரசிகர்கள் பலர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். 

சிலர் பிரிஸ்பேன் டெஸ்டுக்கான இந்திய அணியின் பிளெயிங் லெவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென சொல்லி உத்தேச அணியையும் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அவருக்கே பிரிஸ்பேன் டெஸ்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் சொல்கின்றனர்.