விளையாட்டு

எதிர்பார்ப்போடு இருந்த ஆஸி. ரசிகர்கள் - ஸ்மித்தை சிங்கிள் ரன்னில் வீழ்த்திய அஷ்வின்!

எதிர்பார்ப்போடு இருந்த ஆஸி. ரசிகர்கள் - ஸ்மித்தை சிங்கிள் ரன்னில் வீழ்த்திய அஷ்வின்!

EllusamyKarthik

சமகால கிரிக்கெட் வீரர்களில் மகத்தான பேட்ஸ்மேனாக இருப்பவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பதும் அவர் தான். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக 20 இன்னிங்ஸ் விளையாடி 1429 ரன்களை அவர் குவித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் ரன்களை குவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸில் அவரை ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.  

முதல் இன்னிங்சில் தனது முதல் ஓவரை வீசிய அஷ்வின் மூன்றே பந்துகளில் ஸ்மித்தை அவுட் செய்துள்ளார். இதற்கு முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் புவனேஷ்வர் குமார் ஸ்மித்தை 5 ரன்களிலும், ஜடேஜா 8 ரன்களிலும் அவுட் செய்துள்ளனர். தற்போது அஷ்வின் ஆஸ்திரேலியாவில் ஸ்மித்தை அவுட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்னாகும். 

முதல் இன்னிங்ஸில் அஷ்வின் 18 ஓவர்கள் வீசி 55 ரன்களை கொடுத்ததோடு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் மூன்று மெய்டன் ஓவர்களும் அடங்கும்.