இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வெளிப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சொல்லியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாயிட். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி நடுவர்களிடம் நடந்து கொள்ளும் நடத்தை விதிமுறையை தான் லாயிட் விமர்சித்துள்ளார்.
“கேப்டன் கோலி களத்தில் நடுவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். அவர்களை அவமதிக்கிறார். அவர்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். இந்த தொடர் முழுவதும் அவர் இதனை செய்துள்ளார். அதனால் தான் சொல்கிறேன் வார்த்தைகளில் கவனம் வேண்டும் கோலி. இல்லையென்றால் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு கோலி சாப்ட் சிக்னல் குறித்து சொன்ன கருத்தையும் விமர்சித்துள்ளார் லாயிட். சாப்ட் சிக்னல் சர்ச்சையில் டி20 தொடரின் போது சூரியகுமார் யாதவ் அவுட் விவகாரம் சர்ச்சையாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.