தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கே.எல்.ராகுல் அரை சதம் பதிவு செய்துள்ளார். 128 பந்துகளில் அரை சதம் எட்டினார் ராகுல். அவர் அசுர ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் இன்னிங்ஸில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் பதிவு செய்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்த போதும் ராகுல், நிலையாக களத்தில் நின்று விளையாடினார்.
133 பந்துகளை சந்தித்த அவர் இறுதியில் தனது விக்கெட்டை இழந்தார். 50 ரன்களில் அவர் பெவிலியன் திரும்பிய போது இந்தியா 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் களத்திற்கு வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ந்து வருகிறார். தேநீர் இடைவெளியின் போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து146 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 21 பந்துகளில் 24 ரன்கள் விளாசியுள்ளார். ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்.