விளையாட்டு

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன்: 79 நிமிடங்கள் நடந்த பரபரப்பு; இறுதிப் போட்டிக்குள் பி.வி.சிந்து

EllusamyKarthik

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். அரையிறுதியில் தாய்லாந்து நாட்டு வீராங்கனை சுபநிடா கேத்தோங்கை (Supanida Katethong) 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் அவர். இந்த போட்டி சுமார் 79 நிமிடங்கள் நடைபெற்றது. 

அதே போல ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் HS பிரனாய், இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். அரையிறுதியில் அவர் இந்தோனேசிய வீரரை வீழ்த்தி இருந்தார். 21-19, 19-21, 21-18  என இந்தோனேசிய வீரர் அந்தோனியை அவர் வீழ்த்தினார். 

மற்றொரு அரையிறுதியில் விளையாடிய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, இந்தோனேசிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டி வசம் ஆட்டத்தை இழந்தார். அதனால் இறுதிப் போட்டியில் HS பிரனாய் மற்றும் ஜோனாதன் கிறிஸ்டி விளையாடுகின்றனர்.இன்று இந்த இறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 13,500 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

இந்திய பேட்மிண்டன் வீரர்கள் அடுத்தடுத்த வாரங்களில் நடைபெற்றுள்ள 3 தொடர்களில் முறையே இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளனர். முன்னதாக ஜெர்மன் மற்றும் ஆல்-இங்கிலாந்து ஓபன் தொடரில் லக்ஷ்யா சென் இறுதி வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.