இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன் செக் நாட்டில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்று்ளளார்.
செக் நாட்டின் ஒலமக் நகரில் நடைபெற்ற ஐடிடிஎஃப் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்தில் உக்ரைன் நாட்டின் யெவன் பிரிஷெபா-வை சத்தியன் எதிர்கொண்டார். இதில் 4 - 0 என்ற கேம் கணக்கில் சத்தியன் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். தமிழகத்தை சேர்ந்த சத்தியன் உலக ஒற்றையர் பேட்மின்டன் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற மற்றொரு சர்வதேச தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்தியன் - மணிகா பத்ரா இணை பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.