விளையாட்டு

பாராலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி

JustinDurai
பாராலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் முன்னேறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாராலிம்பிக் ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் தகுதி பெற்றுள்ளார்.
ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையரில் எஸ்.எல்.3 பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் (குரூப்ஏ) நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட்டில் ஜப்பான் வீரர் டைசுகி புஜிகராவை வீழ்த்தினார். இதன் மூலம் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிபோட்டியில் பிரமோத் பகத் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரமோத் பகத் பெற்றுள்ளார்.