விளையாட்டு

தலையில் காயம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகினார் மயங்க் அகர்வால்

EllusamyKarthik

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து மயங்க் அகர்வால் விலகினார் 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4-ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கிய காரணத்தினால் முதல் போட்டியிலிருந்து விலகி உள்ளார். ஏற்கெனவே தொடக்க வீரர், கில் இங்கிலாந்து தொடரிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். தற்போது மயங்க் அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ள காயம் அணியில் மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இங்கிலாந்து தொடரில் விளையாட அழைக்கப்பட்ட மாற்று வீரர்களான பிருத்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து மட்டுமே விளையாட முடியும்.

கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் என இரண்டு பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவரை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணி ஆலோசித்து வருகிறதாம்.