டோக்கியோ ஆடவர் ஹாக்கியில் காலிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 5- ஆம் நிலை அணியான இங்கிலாந்துடன் மோதுகிறது. லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை தவிர்த்து ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா உள்ளிட்ட 4 அணிகளையும் வீழ்த்தியது.
‘பி’ பிரிவில் அங்கம் வகித்த இங்கிலாந்து 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் தனது பிரிவில் 3-வது இடத்தை பிடித்தது. கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி இன்று நம்பிக்கையுடன் களம் காண்கிறது. 8 முறை சாம்பியனான இந்திய அணி கடைசியாக 1980 ஆம்ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது.
அதன் பிறகு தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதியில் தகுதிப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விரு அணிகளும் ஒலிம்பிக்கில் 8 முறை நேருக்கு நேர் மோதி அதில் தலா 4 வெற்றிகளை பெற்றுள்ளன.