ஆஸ்திரேலிய அணியுடன் சிட்னி மைதானத்தில் டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் குவித்துள்ளன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. அதனால், இந்த போட்டியில் தற்போதைய நிலவரப்படி 197 ரன்களும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை நிற வெறியை ஏற்படுத்தும் நோக்கில் சீண்டியுள்ளனர் போட்டியை காண வந்த பார்வையாளர்கள். இந்த ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இந்த சீண்டல் நடந்துள்ளது. சிராஜை திட்டியவர்கள் மது குடித்து இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிராஜ் நிற வெறிக்கு ஆளானதை அறிந்த சீனியர் வீரர்களும், அணியின் கேப்டன் ரஹானேவும் களத்தில் நின்ற நடுவர்களிடம் புகார் கொடுத்துள்ளனர்.
சிராஜ் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் பணியை கவனித்த போது இது நடந்துள்ளது. முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிறவெறிக்கு எதிராக தனது வாய்ஸை கொடுத்திருந்தது. இதற்கு முன்னதாக ஹர்பஜன் - சைமண்ட்ஸ் இடையே நிறவெறி சர்ச்சை எழுந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக உலக அளவில் கால்பந்து உள்ளிட்ட பல போட்டிகளில் நிறவெறி சர்ச்சைகள் எழுவதுண்டு. ஐபிஎல் போட்டிகளில் போது கூட மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டிய நிற வெறிக்கு எதிராக தன்னுடைய குரலை எழுப்பியிருந்தார்.