விளையாட்டு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஷமி புதிய சாதனை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஷமி புதிய சாதனை

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மொத்தம் 9896 பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் அவர். இதன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய இந்திய பவுலர்களான அஷ்வின் (10248 பந்துகள்), கபில் தேவ் (11066 பந்துகள்) மற்றும் ஜடேஜா (11989 பந்துகள்) ஆகியோரை முந்தியுள்ளார் ஷமி. 

இந்திய அணிக்காக மொத்தம் 55 டெஸ்ட் போட்டிகளில் (103 இன்னிங்ஸ்) விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார் ஷமி. கபில் தேவ் 50 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 

இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 மற்றும் அதற்கும் மேலான விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்கள் வரிசையிலும் ஷமி இணைந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை ஷமி கைப்பற்றி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.