விளையாட்டு

அட்டகாசமான இரண்டாவது ஸ்பெல்: இந்தியாவுக்கு நம்பிக்கை கொடுத்த பிரசீத் கிருஷ்ணா!

அட்டகாசமான இரண்டாவது ஸ்பெல்: இந்தியாவுக்கு நம்பிக்கை கொடுத்த பிரசீத் கிருஷ்ணா!

EllusamyKarthik

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அற்புதமான இரண்டாவது ஸ்பெல் வீசி ஆட்டத்தில் இந்தியாவுக்கு கம்பேக் கொடுத்துள்ளார் அறிமுக பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணா. அந்த ஸ்பெல்லில் மூன்று ஓவர்கள் வீசி ஜேசன் ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் அவர். 18 பந்துகளில் 14 பந்துகள் டாட்களாக வீசியிருந்தார். 

அந்த அற்புத ஸ்பெல், இந்தியாவை இந்த ஆட்டத்தில் திரும்ப வர செய்துள்ளது. அதற்கு முன்னதாக வீசிய முதல் ஸ்பெல்லில் பிரசீத் 37 ரன்களை கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு அவர் வீசிய இரண்டாவது ஸ்பெல்லில் ஸ்லிப் பீல்டராக இருந்த கேப்டன் கோலி, இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். அதை பிடித்திருந்தால் மூன்று விக்கெட்டுகளை அள்ளி இருப்பார். 

அவரது சூப்பர் ஸ்பெல் தற்போது இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. மொயின் அலி களத்தில் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையாக உள்ளார். அவரது விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் இந்தியா வெற்றி பெறலாம். பவுலர் தொடர்ச்சியாக வீசும் ஓவர்களைதான் கிரிக்கெட்டில் ஸ்பெல் என குறிப்பிடுகிறோம்.