விளையாட்டு

100ஆவது டெஸ்ட் போட்டியில் ஏமாற்றினார் விராட் கோலி!

100ஆவது டெஸ்ட் போட்டியில் ஏமாற்றினார் விராட் கோலி!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 76 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களில் அவர் அவுட்டானார். கோலி 29-வது அரைசதத்தை பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்த நேரத்தில் அவுட்டானார். விஹாரியுடன் 90 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர். 

அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் அவர். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் கோலி சதம் பதிவு செய்யாமல் உள்ளார். இந்த போட்டியில் அவர் அதை பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இருந்தும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கியும் அதை மிஸ் செய்துள்ளார். அடுத்த இன்னிங்ஸில் கோலி, மூன்று இலக்க நம்பரை எட்டுவார் என நம்புவோம்.