இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது என அவரே ட்வீட் செய்துள்ளார். அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பீல்ட் செய்த போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரிலிருந்து அவர் விலகினார்.
தொடர்ந்து ஐபிஎல் 2021 சீசனிலும் அவர் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியானது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான அவர் இல்லாததால் அணியை ரிஷப் பண்ட் வழிநடத்துகிறார்.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. “நான் களத்திற்கு கூடிய விரைவில் திரும்புவேன். உங்களது அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி!” என அவரரே ட்வீட் செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 67 ரன்கள் விளாசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.