விளையாட்டு

’என்றென்றைக்குமான ஆரம்பம்’ - காதலியை கரம் பிடிக்கிறார் சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாக்கூர்!

’என்றென்றைக்குமான ஆரம்பம்’ - காதலியை கரம் பிடிக்கிறார் சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாக்கூர்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், தனது நீண்ட நாள் காதலியை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று அவருக்கு நிச்சயதார்த்த நிகழ்வு  நடைபெற்றுள்ளது.

30 வயதான ஷர்துல் தாக்கூர், தனது காதலியான மித்தாலி பருல்கர் உடன் இருக்கும் நிச்சயதார்த்த நிகழ்வு படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு ‘The Beginning of Forever’ என கேப்ஷன் கொடுத்துள்ளார் அவர். இந்த நிகழ்வில் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கலந்து கொண்டுள்ளார். 

கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தவான், சுரேஷ் ரெய்னா, சாம் கரன் என பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி உள்ளனர்.