முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹமது கைஃப் யோகா செய்வது போன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முஹமது கைஃப் சூர்ய நமஸ்காரம் செய்வது போன்று வெளியிட்டுள்ள புகைப்படம் மதநம்பிக்கையை மீறும் செயலாகும் என சில இஸ்லாமிய குழுக்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதற்கு விளக்கம் அளித்துள்ள கைஃப், யோகா செய்வது சிறந்த உடற்பயிற்சி என தெரிவித்துள்ளார். அந்த பயிற்சியின் ஒரு அங்கமான சூர்ய நமஸ்காரம் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் வலு சேர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இதில் மதநம்பிக்கையை மீறும் செயல் எதுவுமில்லை என்றும், தமது நெஞ்சில் எப்போதும் அல்லாஹ்வே நிறைந்திருப்பதாகவும் முஹமது ஃகைப் கூறியுள்ளார்.