இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி கடந்த சில ஆண்டுகளாகவே அமர்க்களமான கூட்டணியுடன் சர்வதேச கிரிக்கெட் களத்தை மிரட்டி வருகிறது. அதனால் அணியில் வாய்ப்புக்காக வேகப்பந்து வீச்சாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அப்படி வாய்ப்புக்காக காத்திருப்பவர்களில் ஒருவர் ஜெய்தேவ் உனட்கட்.
அதுவும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியில் இளம் பந்து வீச்சாளர்கள் பலர் அறிமுக வீரர்களாக களம் கண்டனர். இருந்தும் அணியில் உனட்கட் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த சூழலில் இந்திய அணியின் சீனியர் வீரரான அஷ்வின், தனக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்ததாக சொல்லியுள்ளார் உனட்கட்.
“ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய இந்திய அணியில் ரிசர்வ் பவுலர்களாக சென்றிருந்தவர்களுக்கு கூட ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சூழலில்தான் எனக்கு அஷ்வின் பாய் (அண்ணன்) மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘உனக்காக நான் ஃபீல் (Feel) செய்கிறேன். ரஞ்சி சீசனில் சிறப்பாக விளையாடி இருந்தீர்கள். உன் கேம் மற்றும் மைண்ட் செட்டில் தெளிவாக இருங்கள். உனக்கான நேரம் வரும்’ என்றார்” என தெரிவித்துள்ளார் உனட்கட்.