இந்திய கிரிக்கெட் அணியின் 22 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார் தனது காதலி இஷானியை கரம் பிடித்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த சஹார் கோவாவில் நடைபெற்ற திருமண விழாவில் இவரும் இல்வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இதனை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அவர்.
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இந்திய அணிக்காக 5 டி20 மற்றும் ஒரே ஒருநாள் போட்டியில் அவர் விளையாடியுள்ளார். வரும் சனிக்கிழமை அன்று இவர்களது வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளதாக தகவல்.