மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரஹானே சதம் பதிவு செய்துள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது. இருப்பினும் இந்த தொடரில் ரஹானே பதிவு செய்துள்ள சதமே முதல் சதமாகும்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அசராமல் கிரீஸில் நின்ற ரஹானே சிறப்பாக விளையாடினார். கோலி இல்லை. கடந்த போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற சறுக்கலை எல்லாம் கடந்து இந்த சதத்தை ரஹானே பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி 82 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கே சவால் விடும் இந்தியரான அவரது ஆட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்கள் புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். சமுக வலைத்தளமான ட்விட்டரில் அவர்கள் வெளிப்படுத்திய ரியாக்ஷன்ஸ் இங்கே…