விளையாட்டு

கெத்து காட்டும் இந்தியா ! பதுங்கிய நியூசிலாந்து 157க்கு ஆல் அவுட்

கெத்து காட்டும் இந்தியா ! பதுங்கிய நியூசிலாந்து 157க்கு ஆல் அவுட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் விக்கெட்டுகளை விரைவாக
இழந்து நியூசிலாந்து திணறி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி 38 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 3 விக்கெட்டுகளை சாய்த்து, நியூசி அணிக்கு அதிர்ச்சி வைத்தியம்
கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் மற்றும் சாஹல் 2 விக்கெட்டுகளை எடுத்து, நியூசி பேட்ஸ்மேன்களுக்கு தண்ணி காட்டினர். மேலும் பகுதிநேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவ்வும் 1 விக்கெட் சாய்த்தார்.

நியூசிலாந்து அதிரடி பேட்ஸ்மேன்கள் குப்தில், மன்ரோ, லாத்தம், டெய்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்தனர்
இந்திய பந்துவீச்சாளர்கள். நியூசி அணியின் கேப்டனான வில்லியம்சன் மட்டுமே 64 ரன்கள் எடுத்து, அந்த அணியின் மானத்தை
காப்பாற்றினார். இப்போது அந்த அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி வெற்றிப் பெற 158 ரன்கள் இலக்காக இருக்கிறது.