விளையாட்டு

தோள்பட்டை காயம்...இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயஸ் விலகல்!

தோள்பட்டை காயம்...இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயஸ் விலகல்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயஸ் ஐயர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் உள்ளார். இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் சந்தேகம் தான் என தெரிகிறது. எப்படியும் பாதிக்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் எதிர்வரும் சீசனில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. 

இந்திய அணி பீல்டிங் செய்த போது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் பீல்ட் செய்வதிலிருந்து அவர் விலகினார். இந்நிலையில் அவர் எஞ்சியுள்ள போட்டிகளிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஷாட்டர் பார்மெட் கிரிக்கெட்டில் அவர் நல்ல பார்மில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.