விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கினார் ‘ஹிட்மேன்’ ரோகித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கினார் ‘ஹிட்மேன்’ ரோகித் ஷர்மா!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி உள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரோகித் நேற்று அணியினருடன் இணைந்தார். 

இந்நிலையில், இன்று அவர் மெல்பேர்ன் மைதானத்தில் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் பார்வையில் பயிற்சியை தொடங்கினார். அந்த புகைப்படத்தை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. ரோகித்தின் வருகை இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு பலமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர் முன்னாள் வீரர்கள். ஆஸ்திரேலிய அணியிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வார்னர் தேர்வாகியுள்ளார். 

4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7 அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் நடராஜனும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.