விளையாட்டு

இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு கொரோனா!

இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு கொரோனா!

jagadeesh

சாய்னா நேவால் கணவர் உள்பட 4 இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய பேட்மிண்டன் வீரர்களான காஷ்யப், எச்.எஸ்.பிரனாய், குருசாய் தத், பிரணாவ் ஜெர்ரி சோப்ரா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். இதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

முன்னாள் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான காஷ்யப், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் கணவர் ஆவார். சாய்னாவுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். காஷ்யப் உள்ளிட்டோர் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.