விளையாட்டு

“கொரோனானு சொல்றாங்க; ஆனால் ரிசல்ட் முடிவு கைக்கு வரல”- சாய்னா நேவால்

EllusamyKarthik

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அந்த முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்னா இன்று ஆரம்பமாகி உள்ள தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் விளையாட இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பதை கண்டறிந்ததும் பேங்காக்கில் உள்ள மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல அவருடன் பயணித்த மற்றொரு பேட்மிண்டன் வீரர் காஷ்யப்பும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் இருவரும் முதல் சுற்றில் வால்க் ஓவர் என அறிவித்துள்ளது பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு. இதை இந்திய பேட்மிண்டன் அசோஸியேஷனும் உறுதி செய்துள்ளது. 

இருந்தாலும் பரிசோதனை முடிவுகள் தனக்கு கொடுக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் தான் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை வாய்மொழியாக தெரிவித்ததாகவும் சாய்னா தெரிவித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனையிடம்  அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பிறகு நடத்தப்படும் சர்வதேச பேட்மிண்டன் தொடர் இது.