விளையாட்டு

ஒரே பைக்கில் 58 பேர் பய‌ணம்: ராணுவ வீ‌ரர்கள் புதிய சாதனை

ஒரே பைக்கில் 58 பேர் பய‌ணம்: ராணுவ வீ‌ரர்கள் புதிய சாதனை

rajakannan

ஒரே மோ‌ட்டார் பைக்கில் 58 பேர் பயணித்து இந்திய ராணுவ வீ‌ரர்கள் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

டொர்னேடோஸ் என்ற இக்குழுவினர் ‌ராணுவத்தின் ‌சரக்கு கையாளும் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். எடையை சரி‌சமமாக பரவச் செய்து பைக்கை ஓட்டியது மூலம் இச்சாதனை சாத்தியமானதாக மேஜர் பன்னி சர்மா (BUNNY SHARMA) தெரிவித்தார். 
டொர்னேடோ குழுவினர் ஏற்கனவே 19 சாதனைகளை படைத்துள்ளதாகவும், இது 20வது சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 500சிசி ராயல் என்பீல்டு மோட்டர் பைக்கில் 1200 மீட்டர் வீரர்கள் ஓட்டிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.