ஒருநாள் போட்டிகளில் பும்ரா மூலம் தென்னாப்ரிக்க வீரர் டி காக் விக்கெட்டை வீழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ளது. இதில் 2-1 என்ற
கணக்கில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவும், தென்னாப்ரிக்காவும்
மோதுகின்றன. இதில் முதல் ஒருநாள் போட்டி, டர்பனில் உள்ள கிங்க்ஸ்மேட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
தென்னாப்ரிக்க பேட்ஸ்மேன் டி காக், ஒரு நாள் போட்டிகளில் 13 சதங்கள் அடித்துள்ளார். இதில் 5 சதங்கள் இந்தியாவிற்கு எதிராக
அடித்துள்ளார். சமீபகாலமாக இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்தியாவிற்கு எதிராக சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் யார்கர் பந்துகளில் பெரும்பாலும் விக்கெட்டை
பறிகொடுத்துவிடுவார். நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பான யார்கர் பந்துகளை வீசினார். எனவே டி
காக் விக்கெட்டை தொடக்கத்திலேயே பும்ரா மூலம் வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.