விளையாட்டு

டாஸ் வென்றது இந்தியா ! ஆஸி முதலில் பேட்டிங்

டாஸ் வென்றது இந்தியா ! ஆஸி முதலில் பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 தொடர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

இப்போதுள்ள சூழ்நிலையில் ஆஸி அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால். டி20 போட்டிகளில் நாங்கள்தான் சிறப்பாக விளையாடும் அணி என்று ஆஸி கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார். முக்கியமாக அந்த அணியின் தூண்களான வார்னர், ஸ்மித் இல்லாதது ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய அணி பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இரண்டிலும் வலுவான அணியாகவே இருக்கிறது. கோலி, ரோகித், ராகுல் பேட்டிங்கில் களக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, கலீல் அகமது, சஹால், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் போன்றவர்களால் வலுவாக உள்ளது இருக்கிறது.

ஆஸி அணியுடனான போட்டி என்றாலே வார்த்தை தகராறு சகஜம்தான். இது குறித்து பேட்டியளித்த விராட் கோலி "எங்களை சீண்டினாலும் அதற்கேற்ற பதிலடி கொடுப்போம்" என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.