ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதனையடுத்து இன்று 2 ஆவது போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்கிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தப் போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல மணீஷ் பாண்டேவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆடும் லெவனில் இணைக்கப்பட்டுள்ளார்.