இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதிலும் காபா மைதானத்தில் இந்தியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மெல்போர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது. அனுபவ வீரர்கள் காயமடைந்த போதிலும் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி வளர்ந்து வரும் வீரர்களால் சாத்தியமாகி உள்ளது.
சிராஜ், வாஷிங்டன் சுந்தர், தாகூர், கில், பண்ட், விஹாரி என இளைஞர்கள் கொடுத்த பங்களிப்பினால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.