விளையாட்டு

மேட்ச் வின்னராக ஜொலித்த நடராஜன்: முதல் டி20-யில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

EllusamyKarthik

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டி20 போட்டியில் விளையாடியது. கான்பெரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது.

இந்தியாவிற்காக கே.எல். ராகுலும், ஜடேஜாவும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இருந்தனர். தொடர்ந்து அந்த இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. கேப்டன் ஃபின்சும், ஷார்ட்டும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 

இருவரும் பவர்பிளே ஓவர் முடியும் வரை விக்கெட் இழக்காமல் இருந்தனர். அதன் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள். 

ஃபின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல், ஷார்ட், மேத்யூ வேட், ஹென்றிக்ஸ், ஸ்டார்க் என ஏழு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இந்திய பவுலர்கள் வீழ்த்தினர்.

இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா எடுத்தது. இதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

மேக்ஸ்வெல், ஷார்ட் மற்றும் ஸ்டார்க் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடி இருந்தார் நடராஜன். நான்கு ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே அவர் கொடுத்திருந்தார்.