விளையாட்டு

3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்... குத்துச்சண்டை உலகக் கோப்பையில் மாஸ் காட்டிய இந்தியா!

EllusamyKarthik

ஜெர்மனியின் கோல்ன் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தல் காட்டியுள்ளனர்.

3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 9 பதக்கங்களை வென்று இந்தியா மாஸ் காட்டியுள்ளது. அமித் பங்கல் (52 கிலோ), மனிஷா மவுன் (மகளிர் 57 கிலோ) மற்றும் சிம்ரன்ஜித் கவுர் (மகளிர் 60 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்துள்ளனர். 

இந்தியாவை சேர்ந்த ஐந்து வீராங்கனைகளும், எட்டு வீரர்களும் குத்துச்சண்டை உலகக் கோப்பையில் விளையாட பதிவு செய்திருந்தனர். அதற்காக இத்தாலியில் தீவிர பயிற்சியும் மேற்கொண்டனர். 

ஹெவிவெயிட் பிரிவில் (91 கிலோவிற்கு மேல்) இந்திய வீரர் சதீஷ் குமார் அரையிறுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இறுதி போட்டியில் வாக் ஓவரை அறிவித்ததால் வெள்ளி வென்றார். அதேபோல மகளிர் 57 கிலோ பிரிவில் மனிஷாவை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனை சாக்ஷி சவுத்ரி வெள்ளி வென்றார். 

சோனியா லேதர் (மகளிர் 57 கிலோ), பூஜா ராணி (மகளிர் 75 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ) மற்றும் முகமது ஹுஸாமுதின் (57 கிலோ) ஆகிய நான்கு பேரும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். 

நன்றி : DD NEWS