விளையாட்டு

விராட் கோலி ரன் குவிக்காமல் போவதற்கு இதுதான் காரணம் - சுனில் கவாஸ்கர் கருத்து

விராட் கோலி ரன் குவிக்காமல் போவதற்கு இதுதான் காரணம் - சுனில் கவாஸ்கர் கருத்து

JustinDurai

நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் விராட் கோலி மொத்தமே 26 ரன்கள்தான் (8 ரன்கள், 18 ரன்கள்) எடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி  2 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியிருக்கிறது. இரு அணிகளும் மோதும் 3வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து  விலகியபின் விராட் கோலி சாதாரண வீரராக பங்கேற்றுள்ள முதல் தொடர் இதுவாகும். இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் விராட் கோலி மொத்தமே 26 ரன்கள்தான் (8 ரன்கள், 18 ரன்கள்) எடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், ''ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஆனால் கடந்த பல போட்டிகளில் விராட் கோலிக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அவர் ஃபார்மில் இல்லை. அதேநேரம் தென்னாப்பிரிக்காவில் கோலி அரை சதம் அடித்ததை மறந்து விடாதீர்கள்" என்றார்.

இதையும் படிக்க: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி - 'ஒயிட் வாஷ்' செய்யுமா இந்தியா?