விளையாட்டு

இந்தியா-இலங்கை இடையேயான முதல் 2 ஒரு நாள் போட்டிகளின் நேரம் மாற்றியமைப்பு

இந்தியா-இலங்கை இடையேயான முதல் 2 ஒரு நாள் போட்டிகளின் நேரம் மாற்றியமைப்பு

webteam

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகள் தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இலங்கை அணி விளையாட உள்ளது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா-இலங்கை இடையேயான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகள் டிசம்பர் 10, 13 தேதிகளில் முறையே தர்மசாலா மற்றும் மொஹாலியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் மதியம் ஒன்றரை மணிக்குத் தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால் காலை 11.30 மணிக்கே போட்டி தொடங்கும் என பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. விசாகபட்டினத்தில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டி திட்டமிட்டப்படி மதியம் ஒன்றரை மணிக்குத் தொடங்கும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.