விளையாட்டு

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் ட்ரா

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் ட்ரா

webteam

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ட்ராவில் முடிவடைந்தது.

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களும், இலங்கை அணி 294 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி கடைசி நாளான இன்று 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் தமது 50 சதத்தை பூர்த்தி செய்தார். 

இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. கோலி 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 75 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. கூடுதலாக 20 ஓவர்கள் வரை வீசப்பட வேண்டிய நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி டிராவில் முடிந்தது.