விளையாட்டு

பயிற்சியின் போது விராட் கோலியின் விரலில் காயம்

பயிற்சியின் போது விராட் கோலியின் விரலில் காயம்

webteam

பயிற்சியின் போது விராட் கோலியின் விரலில் அடிப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் இந்திய அணியின் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த முதல்பாதி வேளையில் நடந்துள்ளது. அடிபட்ட உடன் விராட் கோலி வலி நிவாரண ஸ்ப்ரேவை எடுத்து அடித்துக் கொண்டிருந்ததார்.

அதை பார்த்த இந்திய அணி பிசியோ நிதின் படேல் அவரது உதவினார். நாளை போட்டி நடக்க உள்ள நிலையில், கோலிக்கு அடிப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.