விளையாட்டு

இலங்கைக்கு எதிரான 2வது டி20 - இந்தியாவுக்கு 143 ரன்கள் இலக்கு

இலங்கைக்கு எதிரான 2வது டி20 - இந்தியாவுக்கு 143 ரன்கள் இலக்கு

webteam

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 142 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதல் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர்களான தனுஷ்கா குனதிலக 20 (21) மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 22 (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வத குஷால் பெராரா 34 (28) ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ஷர்துல் தகூர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதுதவிர பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். தற்போது 143 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.