விளையாட்டு

அரைசதம் விளாசிய கெய்க்வாட், இஷான் கிஷான்: 200 ரன்களை குவிக்குமா இந்திய அணி?

JustinDurai

முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் தென்னாப்ரிக்கா உடனான மூன்றாவது டி20 போட்டியில் ஆடிவருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 3வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷானும் இணைந்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய கெய்க்வாட் பின்னர் பவுண்டரி மழை பொழிந்தார். ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார். 

அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 35 பந்துகளில் 57 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 31 பந்துகளில் அரை சதம் கடந்தார்.  

ஸ்ரேயா ஐயர் 14 ரன்னில் நடையைக் கட்டினார். அதிரடியில் இறங்கி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட 54 ரன்னில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 138/3 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பந்தும், ஹர்திக் பாண்ட்யாவும் களத்தில் உள்ளனர். 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் ஆடிவருகிறது.