விளையாட்டு

IND Vs SA: வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ்-ஐ வெல்லப்போவது யார்?

IND Vs SA: வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ்-ஐ வெல்லப்போவது யார்?

JustinDurai

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஆகியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு அணிக்கும் இடையிலான போட்டி மைதானத்தின் தன்மையை மதியம்  1.30 மணிக்கு ஆய்வு செய்த  பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.