தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிகான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்கெட் கீப்பராக மீண்டும் சாஹா சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பன்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் இடம் பெற்று இருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அத்துடன் முன்னாள் வீரர்களும் அஸ்வின் அணியில் இடம்பெறாததற்கு கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். இந்நிலையில் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி: விராட் கோலி, ரஹானே, ரோகித் ஷர்மா, புஜாரா, மாயங்க் அகர்வால், அஸ்வின், விஹாரி, ஜடேஜா, சாஹா, ஷமி, இஷாந்த் ஷர்மா.