விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்குச் சென்றது இந்திய அணி

மகளிர் கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்குச் சென்றது இந்திய அணி

webteam

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, இந்திய அணிகள் இதில் பங்கேற்று விளையாடின. குரூப் சுற்றுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் சனா மிர் 20 ரன்களும் நஹிதா கான் 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஏக்தா பிஸ்ட் வெறும் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். 

(ஹர்மன்பிரீத் கவுர்)

பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி, 16.1 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக் காமல் இருந்தார். 

பாகிஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக், லக்‌ஷ்மண், இப்போதைய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.