விளையாட்டு

ஈரானை பந்தாடிய இந்திய கபடி அணி - மாஸ்டர்ஸ் சாம்பியனை வென்று அசத்தல்

ஈரானை பந்தாடிய இந்திய கபடி அணி - மாஸ்டர்ஸ் சாம்பியனை வென்று அசத்தல்

rajakannan

துபாயில் நடைபெற்று வந்த மாஸ்டர்ஸ் கபடி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மாஸ்டர்ஸ் கபடி போட்டியில் 6 நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, அரையிறுதியில் தென்கொரிய அணியை 36-20 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஈரான் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. 

இந்தியா - ஈரான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அசத்தினர். முதல் பாதியில் இந்திய அணி 18-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். இதனால், களத்தில் அனல் பறந்து. இரண்டாவது பாதியில் இந்தியா 28 புள்ளிகளும், ஈரான் 15 புள்ளிகளும் பெற்றன. மொத்தத்தில் இந்திய கபடி அணி 44-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி மாஸ்டர்ஸ் கபடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் அஜய் தாக்கூர் 9 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.